மலரும் அரும்புகள்

உள்ளத்தில் உள் வாங்கியதை எள்ளலவும் தயங்காமல் வெள்ளமென பதித்திடுங்கள்.

Monday, January 28, 2008

2008 ம் வருடமே வருக..!


வளமான வாழ்வு எல்லோருக்கும் தருக!.
எண்ணிய யாவும் கைகூட நின்று நீயூம் துணைகூட..
ஏழை என்ன, பணக்காரர் என்ன, யாவருக்கும் உற்றதுணையாக
எந்தச் சோகம் வந்திடினும், எதிர்த்து நின்று சாதிக்கும் வல்லமையையும்..

இன்பதுன்பம் எதுவென்றாலும்..
இறுதிவரை உறுதியாக நின்று..
இதயத்தில் உதயம் பிறக்க எந்நாளும்..
இன்னல்களின்றி, போகின்ற வழிமுழுக்க பூக்கள்தூவி..

உலகில் அமைதி நிலவிட..
உள்ளங்கள் மகிழ்ந்து வியந்திட..
உண்மைகள் எங்கும் ஜெயித்திட..
வறுமைகள் எங்கும் அழிந்திட..

வசந்தங்கள் என்னாளும் நிலவிட..
கேட்டவரம் அத்தனையும் கிடைத்திட
வாழ்த்துக்கள் பல கூறி
வரவேற்கின்றோம் ஆண்டே 2008.

தென்றல்..




இயந்திரமயமான உலகில்..
இயந்திரங்களோடு எட்டுமணி
நேரவேலை பார்த்து..
வேதனையில் வெளியேற..

அதிகாலைப்பொழுதில்..
உடலும் உஷ்ணமடைய...
உள்ளமும் தளர்ச்சி காண..
உதயத்திற்கு முன்னாடி..

கடமைகளை முடித்தவளாய்..
காடோ, வீடோ நம்ம நாடே..
நல்லது என்று எண்ணியவளாய்..
நடையைக்கட்ட வீடு விரைய...

அற்புதமான தென்றல் ஒன்று..
மெல்லத்தழுவிக் கொண்டு..
கொண்ட துன்பம் அத்தனையும்..
துடைத்தெறிந்து மனத்தீபம் ஏற்றிச்சென்றது.

Thursday, November 15, 2007

ஒளி விளக்கு.......

ஒளி விளக்கு.......


இதுவரை நாள் இப்படியிருந்ததில்லை
இனிமேலும் எப்படி நான் இருப்பேனோ
இறைவனை தவிர எனக்குத் தெரியவில்லை..
பாடல் கேட்க பிடிக்கவில்லை

யாரும் கதைகேட்க விருப்பமில்லை
உணவு இருந்தும் உண்ண பிடிக்கவில்லை
உயிரோடு இருக்கவும் எனக்கு இஷ்டமில்லை
அதிகாலை என்ன மாலை என்ன
டெலிபோன் அடித்தால் பதறுது எனக்கு..
எங்கே மறுமுனையில் ஒப்பாரியின் அழுகுரல் எதிரொலித்திடுமோ என்ற அச்சம் மனசில இருக்கு..


வேலைக்கு லீவெடுத்து ஓய்வெடுத்தால்
வேதனைகள் என்னை வாட்டி வதைக்குது..
வேலைக்குப் போய் வந்தால் ஆறுதல் என்றால்
வெந்து துடிக்கிறது நினைவுகளால் இதயம் நொந்து...


நாமும் அங்க போனால் மனசுக்கு ஆறுதல் என்றால்
பழாய்ப்போன பாஸ்போர்ட் வர அதிகநாளெடுக்குமாம்..
பாவம் தான் நான் செய்த பலன் அறிகிறேன் இவ்வுலகில்..
அதனாலோ உயிர் தந்த உறவைவிட்டு அதிதூரத்தில் துயரமாக..


பதறிதுடித்து அழுகிறேன் நானும் தினமும் பரிதாபத்திற்காவது இறைவன் கருணை காட்டமாட்டானா..
பாசத்திற்குரிய எங்கள் ஐயா மீண்டும் பழையநிலைக்கு ஆளாகமாட்டாரா..
ஐயா! ஐயா! என்று அழைக்கும் என் தந்தைக்கு
உடல் ஆரோக்கியமாகாதா?

Tuesday, April 18, 2006

இதயத்தில் ஓர் வலி



இதயத்தில் ஓர் வலி
இடம் பெயர்ந்தும்
இனம் புரியா ஓர் வலி

இனம் பல அழிந்து
தினம் சாகும் எம்மினம்
மனம் படும் துயரம்

தினம் படும் துன்பத்தில்
கொடும் ஆட்சியிது
கொடுமைகள் நிறைந்ததிது


அகதிமுகாமில் பிரசவம்
தனிமை குடிசையில்
குடும்பம் குடித்தனம்

குற்றூயிராய் தந்தை
நடபாதையில் ஊசலாட
மீண்டும் அகதிமுகாமில்

அழுது ஓயவில்லை
எமக்கும் விடிவு
கிடைக்கவில்லை


நாளைய பரீட்சைக்கான
வினாவிடை படித்திருக்க
இன்றே ரவுண்டப்பில்

கேள்வி பதில்
கேட்டது அதிபரில்லை
அதிகார அமைப்பு

பயங்கரவாதமா இல்லை
பள்ளி மாணவனா
பாதிக்கப்பட்டது என் மனம்


தடைகள் ஏதும் வராது
இடர்கள் பல வந்தும்
இடம்பெயர்ந்தோம் இன்று

வந்ததும் வாழ்க்கைக்காக
வாழ்வு இல்லை
வாழ்வதற்காய் வாழ்க்கை

தொடர் கதை தான்
முடிவில்லா தொடர்கதை தான்
விடிவில்லா வாழ்க்கையிது


விடியுமா.....?
நல் வாழ்வு எமக்குண்டா...?
இதயத்தில் ஓர் வலி
ஓயாமல் ஒலிக்கின்றது.

Thursday, April 13, 2006

சித்திரையே நல்வாழ்வு தருக.


சித்திரைப் புத்தாண்டே வருக
எத்தரை நாம் வாழ்ந்திடினினும்
முத்திரை பதித்த எம் வாழ்வினில்
சித்திரை சிறப்பினைத் தருக

எட்டுத்திக்கும் எதிரொளிக்கும்
பட்டுத்தெறிக்கும் தமிழ்அனைத்தும்
கட்டுக்கோப்பாய் காத்திருக்கும்
காலச்சார தமிழ்சித்திரையே

தங்கத்தமிழ் பட்டாடை கட்டி
தாயகத்தில் பட்டுக்கொடி பறக்கவிட்டு
தரைதனில் மண்பானை பொங்கலிட்டு
மகிழ்வுற்ற பொண்ணான வாழ்வுகிடைத்திடுமா

பதிந்திட்ட மனக்காயமாற முன்
பாதிக்கப்பட்ட எம்மினம் மகிழ்வுறுமா
சித்திரையே உன் வரவினால்நல்வாழ்வு வருமா
எனியும் வேண்டாம் துன்பம்இது விலகுமா

துன்பக்கடலில் ழூழ்கியது போதும்
இன்பக் கனவு கைகூடும் நேரம்
தங்கத் தமிழக்கு விடிவு வரும்நேரம்
தமிழ்சித்திரையே சிந்தம் குளிர

தமிழ்மக்கள் மனமகிழ
சிறப்பான வாழ்வு கிடைக்க
தரணியில் தமிழ் கொடிபறக்க
சித்திரையே சிறந்த பலன் தருவீர்.

Sunday, April 09, 2006

முதியோர்.



முகத்தின் சுருக்கங்கள்
ம்...... அது
அனுபவத்தின் பாடங்கள்.

குழந்தை.




நாளைய உலகை தெரிந்து
இன்றைய வாழ்வில் சிரிப்பை
மாத்திரம் செலவு செய்யும்
மழலை!

இளமைப் பருவம்.




ஆண்களுக்கு சிறகு முளைத்த
சுதந்திரப் பறவை.
பெண்களுக்கு சிறகொடிக்கப்பட்டு
கால்களுக்கு விலங்கு....!

விதவை!



உரிமைகள் பறிபோன போதும்......
உள்ளத்தால் நொந்து,
வெள்ளையாய்
வாழ்பவள்!

Saturday, April 08, 2006

பத்திரப்படுத்து...!



மரத்திக்கு மண் பத்திரம்
கட்டிடத்திக்கு அத்திவாரம் பத்திரம்
இணையதளத்திக்கு கனனி பத்திரம்
பயணத்திக்கு குறிக்கோல் பத்திரம்

உழைப்பாளிக்கு நேர்மை பத்திரம்
உயிருக்க உடல் பத்திரம்
காதலுக்கு உண்மை பத்திரம்
காவலுக்கு பொறுப்பு பத்திரம்

எழுத்தாளருக்கு சிந்தனை பத்திரம்
பேச்சாளருக்கு வார்த்தை பிரையோகம் பத்திரம்
சாதனையாளருக்கு நம்பிக்கை பத்திரம்
நோயாளருக்கு பத்தியம் பத்திரம்

பெண்ணுக்கு துணிச்சல் பத்திரம்
புகுந்த வீட்டிக்கு ஒற்றுமை பத்திரம்
ஆசியருக்கு அன்பு பத்திரம்
மாணவருக்கு கல்வி பத்திரம்

நூல் நிலையத்திக்கு அமைதி பத்திரம்
ஆலயத்திக்கு நின்மதி பத்திரம்
வருமானத்திக்கு செலவு பத்திரம்
வாழ்க்கைக்கு நின்மதி பத்திரம்

என் ஆசைகள்




காலமெல்லாம் கணவரோடு
வாழ வேண்டும்.
நாளெல்லாம் அதிகளவில்
படிக்க வேண்டும்.
என் எல்லா உறவுகளையும்
கண்டு வரவேண்டும்.
ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில்
பங்குபற்ற வேண்டும்.
கவலைகள் இல்லாமல்
வாழ வேண்டும்.
கண்ணீர் சிந்தாமல்
களிப்புற்றிருக்க வேண்டும்.
உலகமெல்லாம் சுற்றி
வர வேண்டும்.......

என் சகோதரிகளோடு ஒன்றாக
ஒரு வீட்டில் வாழவேண்டும்.
பிரசித்தி பெற்ற கோவில்களை
சுற்றி கும்பிட்டு வரவேண்டும்.
எனக்கு பிடித்த நண்பர்களை
பார்த்து வரவேண்டும்.
அடடா இத்தனை ஆசைகளும்
மொத்தமாய் நிறைவடைய வேண்டும்.
ஆண்டவன் அருள் தந்தால்
மீண்டுமொரு பிறவி இருந்தால்
வேண்டும் வரம் யாவும்
நிறைவேற்ற வேண்டும்.
நிறைவாக வாழ்வு நிறைவடைய
நீண்ட ஆயுள் ஒன்றும் எனக்கில்லை
குற்றமமேதும் புரியவிலலை நான்
புற்று நோயால் பாதிப்புற்று
மாதம் ஒன்றே இன்னும்
உயிர் வாழ்வேனாம்.
வேண்டும் என் ஆசைகள்
நிறைவேறுமா என் ஆசைகள்.