இதயத்தில் ஓர் வலி

இதயத்தில் ஓர் வலி
இடம் பெயர்ந்தும்
இனம் புரியா ஓர் வலி
இனம் பல அழிந்து
தினம் சாகும் எம்மினம்
மனம் படும் துயரம்
தினம் படும் துன்பத்தில்
கொடும் ஆட்சியிது
கொடுமைகள் நிறைந்ததிது
அகதிமுகாமில் பிரசவம்
தனிமை குடிசையில்
குடும்பம் குடித்தனம்
குற்றூயிராய் தந்தை
நடபாதையில் ஊசலாட
மீண்டும் அகதிமுகாமில்
அழுது ஓயவில்லை
எமக்கும் விடிவு
கிடைக்கவில்லை
நாளைய பரீட்சைக்கான
வினாவிடை படித்திருக்க
இன்றே ரவுண்டப்பில்
கேள்வி பதில்
கேட்டது அதிபரில்லை
அதிகார அமைப்பு
பயங்கரவாதமா இல்லை
பள்ளி மாணவனா
பாதிக்கப்பட்டது என் மனம்
தடைகள் ஏதும் வராது
இடர்கள் பல வந்தும்
இடம்பெயர்ந்தோம் இன்று
வந்ததும் வாழ்க்கைக்காக
வாழ்வு இல்லை
வாழ்வதற்காய் வாழ்க்கை
தொடர் கதை தான்
முடிவில்லா தொடர்கதை தான்
விடிவில்லா வாழ்க்கையிது
விடியுமா.....?
நல் வாழ்வு எமக்குண்டா...?
இதயத்தில் ஓர் வலி
ஓயாமல் ஒலிக்கின்றது.
2 Comments:
At 10:31 PM,
ரவி said…
கவிதை நன்றாக உள்ளது...இந்த வலியை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் என்று நினைத்தேன்...நீங்களும் நன்றாக பதிவு செய்துள்ளீர்..
At 6:14 AM,
maniabi said…
mega arumaiyana kavi vareegal.
இனம் பல அழிந்து
தினம் சாகும் எம்மினம்
ippavum needeekkum kodumai....nalla muyatrchi paraddugal...
Post a Comment
<< Home